விளையாட்டு
உலக செஸ் சாம்பியன்ஷிப்… வெற்றிக் கணக்கை தொடங்கிய தமிழக வீரர் குகேஷ்!

உலக செஸ் சாம்பியன்ஷிப்… வெற்றிக் கணக்கை தொடங்கிய தமிழக வீரர் குகேஷ்!
செஸ் உலகின் ராஜா யார் என்பதை தீர்மானிப்பதற்கான, உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை எதிர்த்து, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சுற்றுப் போட்டி வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் 3ஆவது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும், சீன வீரர் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினர். முதல் இரண்டு சுற்றுகளைப் போன்று இல்லாமல், இந்தப் போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் குகேஷ் செயல்பட்டார். 37ஆவது நகர்த்தலில் சீன வீரர் தோல்வியை ஒப்புக்கொண்டார். கிளாசிக்கல் முறையில் நடைபெறும் போட்டியில் டிங் லிரெனை முதல் முறையாக குகேஷ் வென்றுள்ளார்.
3 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா ஒன்றரை புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 14 சுற்றுகள் கொண்ட போட்டியில், முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார். மூன்றாவது சுற்றில் பெற்ற வெற்றி குகேஷுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.