இலங்கை
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு 08 பில்லியன் வரையில் செலவிட முடியும் – தேர்தல் ஆணையாளர்!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு 08 பில்லியன் வரையில் செலவிட முடியும் – தேர்தல் ஆணையாளர்!
உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்காக 08 பில்லியன் ரூபாய் வரையில் செலவிடமுடியும் என தேர்தல் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், 2023 பண மதிப்பீட்டின்படி, வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக எட்டு பில்லியனுக்கும் அதிகமாக செலவிட முடியும்.
இந்தத் தேர்தலுக்கான சரியான மாதம் மற்றும் திகதியை இன்னும் அறிவிக்க முடியாது. அச்சடிக்கப்படும் வாக்குச் சீட்டுகளின் அளவு கூட பெரியதாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.