வணிகம்
பெட்ரோல் போட்டால் கார், பைக் பரிசு… மக்களை குஷியாக்கிய பரிசு மழை…

பெட்ரோல் போட்டால் கார், பைக் பரிசு… மக்களை குஷியாக்கிய பரிசு மழை…
பெட்ரோல் போட்டால் கார், பைக் பரிசு… மக்களை குஷியாக்கிய பரிசு மழை…
ஜவுளிக் கடைகள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள் என இப்போது எங்கு பார்த்தாலும் வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர்களும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் பெட்ரோல் பங்கிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்குப் பரிசு அறிவித்து உள்ளனர்.
இந்த ஆஃபர் வாகனங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும், வாடகைக்கு வாகனம் இயக்குபவர்களுக்கும் பெரிதும் பயன் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனென்றால் வாகனங்களுக்கு அதிக அளவு மற்றும் அதிக மதிப்பில் பெட்ரோல் அடிக்கும் நபர்களுக்குத் தான் இந்த பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
HP பெட்ரோல் பங்க் கிளைகளில் மட்டும் தான் வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசைப் பெற வாடிக்கையாளர்கள், பெட்ரோலில் நார்மல் பெட்ரோல் அல்லது power 95 பெட்ரோல் அடிக்க வேண்டும். அப்படி அதிக அளவு அல்லது அதிக மதிப்பிற்கு பெட்ரோல் நிரப்பி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கார், பைக், லேப்டாப், DSLR கேமரா என எண்ணற்ற பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
HP பெட்ரோல் பங்கின் 60 பெட்ரோல் பங்கிலும் யார் அதிக அளவில் பெட்ரோல் அடித்திருக்கிறாரோ அவருக்கு ஒரு கார் பரிசாகவும், அடுத்ததாக அதிக அளவில் பெட்ரோல் அடித்த 4 நபர்களுக்கு பைக் பரிசாகவும், அடுத்து வரும் நபர்களுக்கு 4 DSLR கேமரா பரிசாகவும், அடுத்து வருபவர்களுக்கு 4 லேப்டாப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளது. இது மட்டும் இல்லாமல் பைக்கில் ரூ.300க்கு மேல் அடிப்பவர்களுக்கு உடனடியாக ஸ்பாட்டில் பரிசுகளும் வழங்க உள்ளனர்.
இதுகுறித்து HP பெட்ரோல் பங்கின் மேனேஜர் சதீஷ்குமார் கூறுகையில், “நான் இருகூர் L&T பைபாஸ் HP பெட்ரோல் பங்கின் மேனேஜர். HP பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு ஆஃபர் ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகளவில் பெட்ரோல் அடிப்பவர்களுக்கு கார் பரிசாக கொடுக்கிறோம். அதற்கு அடுத்து ஹையஸ்ட் வால்யூம் அடிப்பவர்களுக்கு டூவீலர், கேமரா, லேப்டாப், மொபைல் போன்ற பரிசுகள் கொடுக்கிறோம். இது நவம்பர் 26 முதல் ஜனவரி 26 வரை இது நடைபெறும்.
HPயின் குறிப்பிட்ட 60 பெட்ரோல் பங்கில் மட்டும் தான் இந்த ஆஃபர் உள்ளது. ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி போன்ற ஊர்களில் நடைபெறுகிறது. குறிப்பாக அதிக அளவில் அடிக்கும் பெட்ரோலில் முக்கியமாக பவர் 95 பெட்ரோல் அடிப்பவர்களுக்கு இந்த பரிசு இருக்கிறது. நார்மல் பெட்ரோல் கஸ்டமர்களுக்கும் பரிசு இருக்கிறது. ஆனால் பவர் பெட்ரோல் அடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு பெட்ரோலிலும் அதிக அளவு பெட்ரோல் அடிப்பவர்கள் இருசக்கர வாகனமாகவும் இருக்கலாம், கார்களாகவும் இருக்கலாம். அதிக அளவில் பெட்ரோல் அடிப்பவர்களுக்கு அவர்கள் கார் கஸ்டமர் ஆக இருந்தாலும் அவருக்கு கார் பரிசாக வழங்கப்படும். அதுக்கு அடுத்து அதிக அளவில் அடிக்கும் நபர்களுக்கும் பரிசு உண்டு. மினிமம் ரூபாய் 300 இருசக்கர வாகனத்திற்கும், ரூபாய் 2500 பவர் பெட்ரோல் கார் கஸ்டமரிற்கும் இன்ஸ்டன்ட் கிப்ட் அங்கே கொடுக்கப்படுகிறது.
கீ செயின், வாட்டர் பாட்டில் இந்த மாதிரி சின்ன சின்ன பொருட்களும் வழங்கப்படுகிறது. பெட்ரோல் அடிப்பவர்களுக்கு அங்கு ஒரு ஸ்கேனர் இருக்கும். அதில் ஸ்கேன் செய்து உங்களுடைய டீடைல்ஸ் கொடுத்தீர்கள் என்றால் 60 நாளைக்குள் நீங்கள் அடிக்கும் கணக்கு அதற்குள் வந்துவிடும். அதன் அடிப்படையில் அதிக அளவில் பெட்ரோல் அடிப்பவர்களுக்கு கார் கிப்ட் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.