Connect with us

சினிமா

Sorgavaasal Review: சிறைக் களத்தில் திரைப்படம்… எப்படியிருக்கு ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்…

Published

on

சிறைக் களத்தில் திரைப்படம்... எப்படியிருக்கு ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்...

Loading

Sorgavaasal Review: சிறைக் களத்தில் திரைப்படம்… எப்படியிருக்கு ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்…

சிறைக் களத்தில் திரைப்படம்… எப்படியிருக்கு ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்…

Advertisement

1999களில் மத்தியச் சிறைச்சாலையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் திரைப்படம்.

ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். படத்தினை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

சென்னையில் மத்தியச் சிறையில் 1999ஆம் ஆண்டு பெரும் கலவரம் ஒன்று நடைபெற்றது. துணை ஜெயிலர் எரித்துக் கொல்லப்பட்டார், கலவரைத்தை அடக்க வந்த காவல்துறையினர் சுட்டதில் 9 கைதிகள் கொல்லப்பட்டனர். அந்தக் கலவரத்தை மையமாக வைத்து கற்பனை கலந்து இந்தக் கதையை எடுத்து இருக்கிறார்கள்.

Advertisement

படத்தின் முதல் பாதியில், அம்மா செண்டிமெண்ட் காட்சிகளும், ஜெயில் காட்சிகளும், இரண்டாம் பாதியில் 90களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மைய்யபடுத்தி எடுக்கப்பட்டிருப்பதால், படத்தின் செட், நடிகர்களின் உடை, பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்துமே நம்மை ஈர்க்கின்றது.

வழக்கமாக ஆர்.ஜே பாலாஜி நகைச்சுவை மற்றும் சமூக நீதி கருத்துக்களைச் சொல்பவராக இல்லாமல் இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் நடித்திருக்கிறார். மேலும், படத்தின் முதல் பாதியில் செல்வராகவனின் நடிப்பு அனைவரும் பாராட்டக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியரின் இசை, திரில்லர் படத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து ரசிகர்களைப் படத்துடன் ஒன்றச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன