Connect with us

இந்தியா

ஃபெஞ்சல் பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. மாவட்டங்களின் நிலைமை என்ன?

Published

on

ஃபெஞ்சல் பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. மாவட்டங்களின் நிலைமை என்ன?

Loading

ஃபெஞ்சல் பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. மாவட்டங்களின் நிலைமை என்ன?

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பலரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரின் அளவு 2.45 லட்சம் கன அடியாக உயர்ந்ததை அடுத்து கடலூர் – புதுச்சேரி – சென்னை சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் பெரியகங்கனாங்குப்பம் பகுதியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்பு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற நிலையில், அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

#JUSTIN பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Advertisement

வெள்ளத்தில் சிக்கிய நாய் குட்டிகளை தாயிடம் சேர்த்த மீட்பு படை#Floodrescue #TNRain #Dog #Pet #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/VbuNGmBKzD

கடலூர் மாவட்டம், கண்டங்காடு கிராமத்தை தென்பெண்ணை ஆற்று நீர் சூழ்ந்ததால் தனித்தீவு போல மாறியது. அந்தப் பகுதியில் இடுப்பளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் டிராக்டர் மூலம் பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சூளாங்குறிச்சி கிராம எல்லையில் மணிமுத்தா அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணி நதி மற்றும் முக்தா நதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, நேற்றிரவு அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் சுமார் 20 ஆயிரம் கன அடி உபரிநீர், அணையில் இருந்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மணிமுக்தா ஆற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

#JUSTIN வெள்ளப்பெருக்கு காரணமாக தென்பெண்ணை
ஆற்றின் கரை உடைப்பு; குண்டு உப்பலவாடி முழுவதையும் சூழ்ந்த வெள்ளம்#ThenpennaiRiver #Flood #GunduUppalavadi #Cuddalore #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/SbEjimDYLM

ஆரணி அருகே பெஞ்சல் புயல் காரணமாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கிராமத்திற்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.

பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மையம் கொண்டது. இதனால் திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்தன.

Advertisement

இந்நிலையில் ஆரணி அருகே ஓதலவாடி கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சதுப்பேரிபாளையம் வழியாக ஓதலவாடி செல்லும் செய்யாற்றின் குறுக்கே சுமார் 300 மீட்டர் கொண்ட தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து சென்று வந்தன. மேலும் தற்போது பெஞ்சல் புயல் காரணமாக ஓதலவாடி தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

#JUSTIN ஆரணி அருகே செய்யாற்றில் தரைப்பாலம் உடைந்ததால் இரண்டு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிப்பு#Arani #Tiruvannamalai #Flood #TransportBlock #BridgeDamage #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/wP1FPZG983

இதனால் கிராமத்திற்கு செல்லவும் திரும்பி வரவும் கிராமத்தினர் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மாற்று வழியாக ஆரணியிலிருந்து தச்சூர் பத்தியாவரம் தேவிகாபுரம் வழியாக செல்ல சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல நேரிடும் என்று பரிதாபமாக கிராம பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு பெய்த கனமழையில் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த அரசூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மலட்டாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ள நீர் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மடப்பட்டு வழியாக பண்ருட்டி கோலியனூர் விக்கிரவாண்டி திருப்பி விடப்படுகிறது.

#JUSTIN சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

சென்னை – திருச்சி செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில்
இருந்து கோலியனூர் வழியாக திருப்பி விடப்படுகிறது;
திருச்சி – சென்னை வரும் வாகனங்கள் பண்ரூட்டி,
கோலியனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது #Chennai #Trichy #Highwayspic.twitter.com/1NTbPH2cCn

Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர், பின்னர் மந்தவாய் புதுகுப்பம் பகுதியில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது. வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் உடனுக்குடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவகிறது.

#JUSTIN அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி#MKStalin #Villupuram #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/AIYeiGFBE3

Advertisement

இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னர் முழுமையாக கணக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். நிவாரணம் வழங்க வேண்டிய மத்திய அரசு அதனை வழங்க மறுக்கிறது” என்று தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன