இந்தியா
இந்தியாவிலேயே அதிக IAS, IPS அதிகாரிகளை கொண்ட கிராமம் எது தெரியுமா ?

இந்தியாவிலேயே அதிக IAS, IPS அதிகாரிகளை கொண்ட கிராமம் எது தெரியுமா ?
அதிக IAS, IPS அதிகாரிகளை கொண்ட கிராமம்
இந்தியாவிலேயே மிக கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்று யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஆகும். இத்தேர்வு இந்தியாவின் உயரிய பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வை நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதுகின்றனர். குறைந்த பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் போட்டிப் போடுவதால் வெற்றி வாய்ப்பு என்பது கடினமாக உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாதோபட்டி என்ற கிராமத்தில் இருந்து இதுவரை சுமார் 51 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வந்துள்ளனர். இந்தியாவிலேயே ஒரு கிராமத்தில் இருந்து இத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட இடம் இதுதான். அதனாலையே இந்த கிராமத்திற்கு ”இந்தியாவின் ஐஏஎஸ் தொழிற்சாலை” என்ற பெயர் வந்துள்ளது.இந்த கிராமத்தில் மொத்தம் உள்ள வீடுகளின் எண்ணிக்கையே 75தான்.
இந்த கிராமத்தின் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக வந்துள்ளனர். வினய் குமார் சிங், சத்ரபால் சிங், அஜய் குமார் சிங் மற்றும் சஷிகாந்த் சிங் ஆகிய 4 பேரை ஐஏஎஸ் சகோகதர்கள் என்று அழைக்கின்றனர். இதில் மட்டுமில்லாமல் இந்த கிராமத்தில் மாநில அரசு வேலையில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். விண்வெளி, அணு ஆராய்ச்சி, நீதித்துறை, வங்கி என மத்திய அரசு துறைகளின் வேலைகளில் ஏராளமானோர் உள்ளனர்.
தாக்கூர் பகவதி தின் சிங் என்ற விடுதலை போராட்ட வீரரும், அவரின் மனைவி ஷியாம்ரதி சிங் இணைந்து இந்த கிராமத்தில் 1917ஆம் ஆண்டு கல்வியை கற்பிக்க தொடங்கினர். இந்த தம்பதிகள் முதலில் பெண்களுக்கு மட்டும் கற்பிக்க தொடங்கியுள்ளனர். காலப் போக்கில் ஆண்களும் இதில் இணைந்துள்ளனர். பல ஆண்டு கடின உழைப்பு அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அது அந்த கிராமத்தை மாற்றியது. தொடர்ந்து, கல்வியின் பயனால் அரசு துறை பணிகளுக்கு முயற்சி மேற்கொண்டு பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுவரை இந்த கிராமத்தில் இருந்து மட்டுமே சுமார் 51 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரவும் வாய்ப்புள்ளது. கல்வியும், கடினம் உழைப்பும் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும் என்பதை இந்த கிராமத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.