இலங்கை
குளவிக்கொட்டுக்கு இலக்கான 17 குழந்கைள் மருத்துவமனையில்

குளவிக்கொட்டுக்கு இலக்கான 17 குழந்கைள் மருத்துவமனையில்
அநுராதபுரம்- தலாவ ஹெலம்பவெவ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
3 முதல் 4 வயதுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
முன்பள்ளி பாடசாலையின் தோட்டத்தில் உள்ள மாமரத்திலிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் தலாவ ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.