Connect with us

பொழுதுபோக்கு

சீரியல் நடிகை நிச்சயதார்த்தம்: குவியும் வாழ்த்துக்கள்; போட்டோஸ் வைரல்!

Published

on

Dhanushik Engegament

Loading

சீரியல் நடிகை நிச்சயதார்த்தம்: குவியும் வாழ்த்துக்கள்; போட்டோஸ் வைரல்!

விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.தமிழ் சின்னத்திரையில் நகரத்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவது விஜய் டிவி சீரியல்கள். அந்த வகையில் காதல் மற்றும் ரொமாண்டிக் கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் நீ நான் காதல். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல், இஸ் பியார் கோ கியாணா தூண் என்ற இந்தி சீரியலின் ரீமேக்காக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.ராஜன் சுந்தரம் என்பவர் இயக்கி வரும் இந்த சீரியலில், பிரேம் ஜாக்கப், வர்ஷ்னி சுரேஷ் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரயலில் நாயகன் நாயகியை தவிர, மற்றொரு முக்கிய கேரக்டர் என்றால், அது அஞ்சலி கேரக்டர் தான். இந்த கேரக்டரில் நடிகை வி.ஜ.தனுஷிக் விஜயகுமார் நடித்து வருகிறார். இலங்கை தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர், அதன்பிறகு தமிழ்நாட்டில் ஒரு சில சேனல்களில் பணியாற்றியுள்ளார்.சிறுவயதில் ஆங்கரிங் செய்ய தொடங்கிய இவர், இலங்கையில் இருந்து இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது திறமையை மேலும் வளர்த்துக்கொண்டார். நண்பர்களை நம்பி தமிழகத்திற்கு வந்து ஏமாற்றத்தை சந்தித்தாகவும், அதன்பிறகு இலங்கையில் இவர் பணியாற்றிய சேனலின் உரிமையாளர் தனது நண்பர்களிடம் சொல்லி, தனுஷிக்கு உதவியதாகவும் தகவல்கள் உள்ளது. சில மாத இடைவெளிக்கு பிறகு தமிழ் சேனல்களில் வாய்ப்பு தேட தொடங்கியுள்ளார்.A post shared by Vj Dhanusek Vijayakumar (@vj_dhanusek)ஒரு சில சேனல்களில் பணியாற்றிய அவர், தற்போது சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளார். நீ நான் காதல் சீரியல் மூலம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நடிகை தனுஷிக் விஜயகுமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன