இந்தியா
தொடர்மழை எதிரொலி… பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

தொடர்மழை எதிரொலி… பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடர் மழை காரணமாக ஒத்திவைப்பு.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பெஞ்சல் புயலால் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து சேலத்திலும் கடந்த இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வழக்கை பாதித்துள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (டிச.02) நடைபெற இருந்த பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.