வணிகம்
பாஸ்போர்ட் சேவை முதல் சிறிய சேமிப்பு திட்டங்கள் வரை.. தபால் நிலையத்தில் கிடைக்கும் சேவைகள்!

பாஸ்போர்ட் சேவை முதல் சிறிய சேமிப்பு திட்டங்கள் வரை.. தபால் நிலையத்தில் கிடைக்கும் சேவைகள்!
தற்போது பாஸ்போர்ட் சேவைகள் 442 போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில்வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமான சேமிப்பு வித்ட்ராயல்களுக்கு இந்த அக்கவுண்ட்டை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கான மினிமம் பேலன்ஸ் 500 ரூபாய் மற்றும் அடிப்படை சேவிங்ஸ் அக்கவுண்ட் ஆக இருந்தால் மினிமம் பேலன்ஸ் பூஜ்ஜியமாக இருக்கும். இதில் ATM, இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங், NEFT மற்றும் RTGS போன்ற வசதிகள் உண்டு. போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து UPI, IMPS போன்ற சேவைகளை வழங்குகிறது.
இதில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. இதற்கான கால அளவு 5 வருடங்கள். மேலும் இதனை கூடுதலாக 5 வருடங்கள் நீடித்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
1,2,3,5 வருடங்கள் இதற்கான மினிமம் டெபாசிட் 1000 ரூபாய், அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு எதுவும் கிடையாது. 5 வருட டைம் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்கள் வருமான வரி பலன்களை பெற்றுக் கொள்ளலாம். 5 வருடங்கள் நிறைவடைந்த பிறகு 2 முறை அக்கவுண்ட்டை நீடித்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.
மாத வருமானம் பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாயாகவும், அதிகபட்ச டெபாசிட் சிங்கிள் அக்கவுண்டுக்கு 9 லட்சம் ரூபாயும், ஜாயிண்ட் அக்கவுண்டுக்கு 15 லட்சம் ரூபாயும் ஆகும். இதன் கால அளவு 5 வருடங்கள்.
சீனியர் சிட்டிசன்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச டெபாசிட் 30 லட்சம் ரூபாய். இதன் கால அளவு 5 வருடங்கள் ஆகும். கால அளவு முடிந்த பிறகு கூடுதலாக 3 வருடங்கள் நீட்டித்துக் கொள்வதற்கான அனுமதியும் கிடைக்கிறது.
இதற்கான குறைந்தபட்ச டெபாசிட் 500 ரூபாய், அதிகபட்ச டெபாசிட் ஒரு நிதியாண்டிற்கு 1,50,000 ரூபாய். இதற்கான கால அளவு 15 வருடங்கள் மற்றும் மேலும் நீட்டித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வரி பலன்கள் உண்டு.
பெண் பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் ஆக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான ஆரம்பகால குறைந்தபட்ச டெபாசிட் தொகை 250 ரூபாயாகவும், அதிகபட்ச டெபாசிட் 1,50,000 ரூபாயாகவும் உள்ளது. இந்தத் திட்டத்திற்கும் வரிப்பலன்கள் உண்டு. இதன் கால அளவு 21 வருடங்கள்.
குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு கிடையாது. இந்த திட்டத்திற்கு வரிப்பலன்கள் உண்டு. இதன் கால அளவு 5 வருடங்கள்.
இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் அதிகபட்ச வரம்பு கிடையாது. மெச்சூரிட்டியின் போது முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக மாறும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காகவே
பிரத்தியேகமாக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2025 வரை முதலீடு செய்யலாம். இதற்கான குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடு 2 லட்ச ரூபாய். இந்த திட்டத்திற்கான கால அளவு 2 வருடங்கள்.
இது சேவிங்ஸ் மற்றும் கரண்ட் அக்கவுண்ட் ஆக கருதப்படுகிறது. இதற்கு வெர்சுவல் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதில் பில்கள் மற்றும் யுட்டிலிட்டி பேமெண்ட்களை செலுத்தலாம். இந்த வங்கியின் கஸ்டமர்களுக்கு இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படுகிறது.