இலங்கை
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர். ஓல்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நியமனக் கடிதம் இன்று (02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் திருமதி ஓல்காவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.