Connect with us

இலங்கை

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் இல்லை ; மறுக்கும் தூதரகம்!

Published

on

Loading

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் இல்லை ; மறுக்கும் தூதரகம்!

  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரான்ஸ் செல்லவென சென்ற யாழ் இளைஞர்கள் ரஷ்யபடையில் ஏமாற்றி சேர்க்கப்பட்டிருபதாக இளைஞர்களின் உறவினர்கள் கூறியிருந்ததுடன், அவர்கள் மீட்டுதருமாரும் அரசாங்கத்திடம் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

Advertisement

இது தொடர்பில் ரஸ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கவனம் செலுத்தியது.

இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை என்பதை தூதரகம் வலியுறுத்த விரும்புகின்றது.

Advertisement

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்,இந்த தகவல்களின் நோக்கம் இலங்கை ரஸ்யா இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்குலைப்பதாகும்

.

எங்கள் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களையும் ரஸ்ய அதிகாரிகள் மதிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை வழங்க தயாராகவுள்ளனர்.

Advertisement

அதோடு ரஸ்யாவில் தங்கியிருக்கின்ற இலங்கையர்கள் தொடர்பான விடயத்தினை மொஸ்கோவில் உள்ள ரஸ்யாவிற்கான இலங்கை தூதரகமே கையாள்கின்றது என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

இந்நிலையில் நேர்மையற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் இலங்கையர்களை ரஸ்யாவிற்கு அனுப்புவது குறித்து தூதரகத்திற்கு எந்ததகவலும் கிடைக்கவில்லை.

இதேவேளை இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கோரப்பட்டால் அதற்கு உதவுவதற்கு தாங்கள் தயாராகவுள்ளதாகவும் ரஸ்ய தூதரகம் கூறியுள்லதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன