இலங்கை
வலம்புரி சங்குடன் மூவர் கைது!!!!

வலம்புரி சங்குடன் மூவர் கைது!!!!
திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது கைதாகினர்.
பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பஸ்ஸர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 36 முதல் 50 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மூன்று வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக ளுக்காக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (ஏ)