இந்தியா
வேளாண் உற்பத்திப் பொருள்… தமிழ்நாடு உழவர் பேரியக்கம் அரசுக்கு கோரிக்கை!

வேளாண் உற்பத்திப் பொருள்… தமிழ்நாடு உழவர் பேரியக்கம் அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாட்டில் விவசாய உற்பத்தி பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் இல.வேலுசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு உழவர் பேரியக்க இல.வேலுச்சாமி, ”தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். அவர்களின் நீண்ட கால நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதில் விவசாய நீண்டகால பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.
விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். விவசாய பணியின்போது மரணமடையும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புள்ள நீர்வள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். பல்வேறு பணிகளுக்காக விளைநிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுவதை நிச்சயம் தடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
மேலும், “கள் அனுமதி என்ற கோரிக்கையை எதிர்க்கிறோம். கள் மட்டுமல்ல மூளை சிதைக்கும் எவ்விதமான போதை பொருளுக்கும் தமிழகத்தில் இடமளிக்கக் கூடாது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் ஆளுங்கட்சியினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மண் வெட்டி எடுக்கப்படுவதாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் அதிக அளவு கல் குவாரிகள் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எந்தளவு வெட்ட வேண்டும். எத்தனை குவாரிகள் செயல்பட வேண்டும் என விதிகள் உள்ளன. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மானிய திட்டங்களில் ஆளுங்கட்சியினர் மட்டுமே பயனடைகின்றனர்” என்றும் தெரிவித்தார்.
டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை!
இந்தி இயக்குநருடன் இணையும் அல்லு அர்ஜுன்