Connect with us

தொழில்நுட்பம்

2025-ல் 2 முறை சூரிய கிரகணம்: எப்போது வருகிறது, இந்தியாவில் தெரியுமா?

Published

on

partial solar e

Loading

2025-ல் 2 முறை சூரிய கிரகணம்: எப்போது வருகிறது, இந்தியாவில் தெரியுமா?

மிகவும் பிரலமான வானியல் நிகழ்வு சூரிய கிரகணம் அடுத்தாண்டு 2025-ல் 2 முறை நிகழ உள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கும் இடையில் நிலவு வந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைப்பது சூரிய கிரகணம் ஆகும். அடுத்தாண்டு 2025-ல் சூரிய கிரகணம் 2 முறை நிகழ உள்ளது. மார்ச் 29 மற்றும் செப்டம்பர் 21-ம் தேதி  சூரிய கிரகணம் வர உள்ளது. இரண்டும் பகுதி சூரிய கிரகணம் என்று கூறப்பட்டுள்ளது. மார்ச் 29 சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 அன்று நிகழும் பகுதி சூரிய கிரகணம், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் வடக்குப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகள், அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பகுதி ஆகியவற்றில் தெரியும்.அதாவது, பெர்முடா, போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா, மொராக்கோ, ஸ்பெயின், கிரீன்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஐல் ஆஃப் மேன், யுனைடெட் கிங்டம், ஐஸ்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, பரோயே தீவுகள், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தெரியும். இருப்பினும், இந்தியாவில் இது தெரியாது.செப்டம்பர் 21, 2025 சூரிய கிரகணம்மேற்கூறிய கிரகணத்தைப் போலவே, செப்டம்பரில் நிகழும் கிரகணம் ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகள், பசிபிக், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும். துவாலு, டோகெலாவ், வாலிஸ் மற்றும் ஃபுடுனா, சமோவா, அமெரிக்கன் சமோவா, ஜப்பானில் உள்ள பிஜி, டோங்கா, நியு, டஹிடி, பிரெஞ்சு பாலினேசியா, குக் தீவுகள், வனுவாடு, நியூ கலிடோனியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவில் மக்முர்டோ உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் பகுதிகளில் இந்த பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும். முந்தையதைப் போலவே, இதுவும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன