Connect with us

சினிமா

3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் புஷ்பா 2  திரைப்படம் : ரசிகரிகளின் எதிர்பார்ப்பு என்ன ?

Published

on

புஷ்பா 2

Loading

3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் புஷ்பா 2  திரைப்படம் : ரசிகரிகளின் எதிர்பார்ப்பு என்ன ?

புஷ்பா 2

Advertisement

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த புஷ்பா 2 படம் ஓடும் நேரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படம் 3 மணி நேரம் 21 நிமிடம் இருக்கிறது என்று சென்சார் போர்டு அறிவித்துள்ளது.மேலும்புஷ்பா 1 படம் 3 மணி நேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவாக இருந்தது. ஆனால் புஷ்பா 2 அதைவிட 20 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கிறது.

ரன்பீர் நடிப்பில் வெளியான அனிமல் படமும் இதே நேர அளவுக்கு வெளியானாலும் அதன் பரபரப்பான திரைக்கதையினால் நல்ல வரவேற்பு கிடைத்தது. சில படங்கள் 2 மணி நேரம் 30 நிமிடம்ஓடினாலும் 4 மணி நேரம் ஓடுவது போல் தோன்றும். மேலும் தமிழில் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள் வெளியீட்டுக்குப் பிறகு படத்தின் நீளத்தை குறைத்த நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.

அந்த வரிசையில் வரும் புஷ்பா 2 படம் அதிக நேரம் கொண்ட படமாக இருப்பதால், இந்திய சினிமாவில் அதிக நேரம் கொண்ட படங்களில் ஒன்றாக இந்தப் படமும் இணைந்துவிடும். தெலுங்கில் கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் 2022ல் வந்த ஆர்ஆர்ஆர் படம் 3 மணி நேரம் 6 நிமிடங்களும், இந்த வருடம் வெளிவந்த கல்கி 2898 எடி படம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

குறிப்பாக இந்த வருடத்தின் கடைசி பிரம்மாண்டப் படமாகபுஷ்பா 2 படம் இருப்பதால் எவ்வளவு நீளமான படமாக இருந்தாலும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரசிக்கத்தான் போகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன