சினிமா
Vidaamuyarchi Teaser: டீசருக்கே தியேட்டர் ரிலீஸ்… விடாமுயற்சி டீசரை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்…

Vidaamuyarchi Teaser: டீசருக்கே தியேட்டர் ரிலீஸ்… விடாமுயற்சி டீசரை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்…
டீசருக்கே தியேட்டர் ரிலீஸ்… விடாமுயற்சி டீசரை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்…
நடிகர் அஜித் குமார் கடைசியாக நடித்த துணிவு திரைப்படத்திற்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அவரது படம் பற்றிய எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்த காரணத்தினால் அஜித் ரசிகர்கள் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்திருந்தனர்.
அதன் பிறகு குட் பேட் அக்லி, விடாமுயற்சி என படத்தின் போஸ்டர்கள் வெளியிட்டாலும் அதன் பின்னர் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் படத்தை பற்றிய அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.
இப்போது அப்போது என தொடர் இழுபறி நிலவி வந்த நிலையில் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தின் டீசரை கொண்டாட முடிவு செய்த விருதுநகர் அஜித் ரசிகர்கள், விடாமுயற்சி பட டீசரை திரையிட்டுக் கொண்டாடினர். டீசர் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி விருதுநகர் ஶ்ரீராம் திரையரங்கில் ரசிகர்களுக்காக விடாமுயற்சி டீசர் திரையிடப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் கழித்து, தங்களின் நீண்ட கால காத்திருப்பின் பலனாக வந்துள்ளதால் முன்னதாகவே அங்கு கூடி ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். முதல் நாள் முதல் காட்சி போல திரையரங்கு முழுவதும் ஆரவாரத்துடன் காணப்பட்ட நிலையில், டீசரோடு அஜித் குமார் பற்றிய சில மாஸ்அப் பாடல் காட்சிகளும் ரசிகர்களைக் குஷிப்படுத்தத் திரையிடப்பட்டது.
டீசர் பார்த்த ரசிகர்கள், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு ஏற்ற படமாக விடாமுயற்சி இருக்கும் என்பதை டீசர் மூலம் தெரிந்து கொண்டோம். விடாமுயற்சி பொங்கலுக்கு வருவதன் மூலம் இந்த பொங்கலும் தல பொங்கல் தான் என கருத்து தெரிவித்தனர். குறிப்பாக வழக்கமான போக்கில் இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் படக்காட்சிகள் இருப்பதாகவும், அதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.