பாலிவுட்
தமிழ் ஹீரோஸூக்கு அட்டர் Flop ஆன சரித்திர படங்கள்.. பாகுபலி மாதிரி Kollywood-ல் எடுக்கவே முடியாதா?

தமிழ் ஹீரோஸூக்கு அட்டர் Flop ஆன சரித்திர படங்கள்.. பாகுபலி மாதிரி Kollywood-ல் எடுக்கவே முடியாதா?
இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவுக்கு என தனி மரியாதை உள்ளது. ஏனென்றால் பல ஜாம்பாவான்கள் இருந்து பணியாற்றிய பெரும் புகழ் பெற்றது தமிழ் சினிமா. இன்று இந்தி, தெலுங்கு படங்களில் சரித்திர படங்கள் வருவதற்கு முன்னமே தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே பல பிரமாண்ட படைப்புகள் வெளியாகின.
எம்ஜிஆரின் ராஜ ராஜன் சிவாஜியின் ராஜராஜ சோழ, கர்ணன் படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? அதேபோல், தமிழில் கமலின் தசாவதாரம் படத்தில் நெப்போலியன் நடித்த கதாப்பாத்திரம் இவையெல்லாம் சிறந்த படங்களாக உள்ளன.
அதேபோல், வடிவேலு நடிப்பில், சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23 அம் புலிகேசி, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன். பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில், கலைஞர் கதை, திரைக்கதை வசனம் எழுதிய பொன்னர் சங்கர் படம் இவையெல்லாம் தரமான படங்களாக இருந்தாலும், ராஜமெளலி இயக்கத்தில் வெளியான மகதீரா, பாகுபலி 1, 2 ஆகிய படங்கள் தான் பெருமைமிக்கத படங்களாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் பாகுபலி படத்தின் பட்ஜெட் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு இவையெல்லாம் தான் பொன்னியின் செல்வன் பட த்திற்கும் இப்படியான ஒரு பட்ஜெட்டில் இந்தியாவில் படமெடுக்க முடியும் என தூண்டியுள்ளதை மறுக்க முடியாது. அதேசமயம், பாகுபலி மாதிரி இப்போது தமிழில் எடுக்கப்படும் சரித்திர படங்கள் ஏன் வெற்றிபெறவில்லை கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் அப்போது வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் இதன் 2 வது பாகம் எப்போது வெளியாகும் என செல்வராகவனை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்த படமாவது பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வடிவேலுயின் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பட த்தை ஹிட்டாக்கிய சிம்புதேவன், விஜய்- ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான புலி படத்தை ஹிட்டாக்க முடியவில்லை. அதேபோல், சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான கங்குவா படம் பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்கும் என ஓவர் ஹைப் கொடுத்தனர். ஆனால் பல சொதப்பல்கள் அப்படத்தில் இருந்ததால் வசூலிலும் ஏமாற்றமே.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் பட த்தின் பட்ஜெட்டில் கூடுதலாக செலவு செய்ய முடியாமல், இருக்கும் குறைந்த பணத்தில் படத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் செல்வதால்தான் தரமான சரித்திர படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க முடியவில்லையோ? என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாகுபலி அளவுக்கு இல்லை என்றாலும் பொன்னியின் செல்வன் படம் மூலம் தமிழிலும் இக்காலத்துக்கு ஏற்ப தரமான சரித்திரம் பட த்தை எடுத்த இயக்குனர் மணிரத்னத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 வது பாகம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. இனி வரும் காலத்தில் தெலுங்கு, பாலிவுட்டுக்கு நிகரான தமிழிலும் சரித்திர படங்கள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதேசமயம் தமிழ் ஹீரோக்கள் நடித்த சரித்திர படங்களில் தங்கள் படம் எதனால் ஓடவில்லை என்பதை சுயபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.