Connect with us

இந்தியா

நேரில் சென்று உதவி வழங்காதது ஏன்.? TVK தலைவர் விஜய் சொன்ன காரணம் செல்லுபடியானதா.?

Published

on

Loading

நேரில் சென்று உதவி வழங்காதது ஏன்.? TVK தலைவர் விஜய் சொன்ன காரணம் செல்லுபடியானதா.?

தான் தற்போது சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்தே இதே கதை தான் நடந்து கொண்டிருக்கிறது. அவர் எது செய்தாலும் ஒரு சர்ச்சை கிளம்பி விடுகிறது.

அதன்படி தற்போது அவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்துள்ளார். ஆனால் நேரில் சென்று இந்த உதவிகளை செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்து பொருட்களை கொடுத்துள்ளார்.

Advertisement

இதை தான் தற்போது அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஒரு கட்சியின் தலைவர் நேரில் செல்லாமல் மக்களை சிரமத்திற்கு ஆளாக்குவது சரி கிடையாது. இப்படிப்பட்டவரா தேர்தலில் ஜெயித்து மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார் என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய் எதற்காக நேரில் செல்லவில்லை என்ற காரணம் தெரியவந்துள்ளது அதன்படி மக்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தால் கூட்டம் கூடிவிடும். இது அனைவருக்கும் சிரமங்களை கொடுக்கும்.

அதேபோல் அவர்களிடம் விலாவாரியாக பேச முடியாது. அதனால் தான் நேரில் வந்து பொருட்களை கொடுக்க முடியவில்லை. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் இந்த நிகழ்வின் போது மக்களிடம் கூறியிருக்கிறார்.

Advertisement

ஆனாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என கருத்துக்கள் பரவி வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் மற்றொரு விஷயத்தையும் பதிவிட்டு வருகின்றனர் அதாவது கடந்த வருடம் தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் அங்கு சென்று தான் சந்தித்தார். நிவாரண பொருட்களையும் கொடுத்தார்.

இதையும் மனதில் வைத்து பேசுங்கள் என தொண்டர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். இப்படி இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் விஜய் கூடிய சீக்கிரம் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் மாவட்ட மக்களை நேரில் சந்திப்பார் என்ற செய்தியும் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன