இந்தியா
School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 04) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 04) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பொழிந்தது. இதன் காரணமாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சில இடங்களில் ஏரியும் ஆறும் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
வெள்ளப்பாதிப்பைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பகுதியில் அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு தரப்பில், அதி கனமழை காரணமாக கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதேபோன்று சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டார். கால்நடைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகளும், மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முகாம் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (4ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (4ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர மற்ற அனைத்து பள்ளி கல்லூரிகளும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலூரில் உள்ள மூன்று ஊராட்சிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 4-ம் தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்.