பொழுதுபோக்கு
‘சரிகமப’ மூலம் கோரிக்கை வைத்த மாணவி; ஆக்ஷனில் இறங்கி நிறைவேற்றிய தமிழக அரசு

‘சரிகமப’ மூலம் கோரிக்கை வைத்த மாணவி; ஆக்ஷனில் இறங்கி நிறைவேற்றிய தமிழக அரசு
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். இதில், விழுப்புரம் மாவட்டம் அம்மணப்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த தர்ஷினி என்பவரும் போட்டியாளராக உள்ளார். 60 முதல் 70 குடும்பங்கள் வாழும் இந்த ஊரில் முறையான பேருந்து வசதி இல்லை. பள்ளிக்கு செல்ல தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் தர்ஷினி கூறினார். சமீபத்தில் ‘ZEE தமிழ்’ @ZeeTamil தொலைக்காட்சியில் நடைபெறும் “சரிகமப “ இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷினி என்ற மாணவி, பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டு 5 கி.மீ தூரம் நடந்து செல்வதை சொன்னதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம்… pic.twitter.com/9YdMrGB01bதொடர்ந்து தங்கள் ஊருக்கு தமிழக அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று டிசம்பர் 5 போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அம்மணப்பாக்கம் ஊருக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி அதை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.