சினிமா
சம்பாதிச்சது மொத்தமும் போச்சி..ஜீரோவாக நிற்கிறோம்..மைனா நந்தினியின் உருக்கமான பதிவு..

சம்பாதிச்சது மொத்தமும் போச்சி..ஜீரோவாக நிற்கிறோம்..மைனா நந்தினியின் உருக்கமான பதிவு..
விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி மக்கள் மதியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியலில் ஒன்று, சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் நந்தினி. இந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த தொடர்களில் நடித்து வந்தார்.பின் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினி வேலை பார்த்தார். பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் தன் கணவருடன் யூடியூப் சேனல் துவங்கினார்.புள்ளத்தாட்சி என்ற வெப் தொடரை எடுத்து வாரவாரம் வெளியிட்டு வந்த மைனா நந்தினி, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.அதில், புள்ளத்தாட்சி வெப் தொடருக்காக இலங்கை சென்று படப்பிடிப்பு எடுத்து 800 ஜிபி அளவிற்கான ஃபுட்டேஜை ஹார்ட் டிஸ்கில் போட்டு வைத்தோம்.அது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து 11 நாட்கள் எடுத்த எல்லாமே போய்விட்டது. இதற்காக யூடியூப் மூலம் சம்பாதிச்ச பணத்தை போட்டும், மேலும் காசு போட்டு அதை செய்தோம். அதை மீட்க லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால் அதை எங்களால் செய்யமுடியவில்லை, நிற்கிறோம் என்று உருக்கமாக பேசி இருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.