சினிமா
சீரியல் டூ சினிமா!! 36 வயதில் கோடியில் புரளும் நடிகை வாணி போஜன்.. சொத்து இவ்வளவா?

சீரியல் டூ சினிமா!! 36 வயதில் கோடியில் புரளும் நடிகை வாணி போஜன்.. சொத்து இவ்வளவா?
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். செங்கமலம், சட்னி சாம்பார் உள்ளிட்ட ஓடிடி தள படங்களில் வாணி போஜன் நடிப்பில் வெளியாகியது. தற்போது ஆர்யன், கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் சீரியலில் நடிப்பதற்கு முன் பல ஏர் லைன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றி வாணி போஜனுக்கு அங்கு சம்பளமாக 2500 ரூபாய் வாங்கியிருக்கிறார். அதன்பின் சீரியலில் நடித்த போது 5 முதல் 15 லட்சம் வரை சம்பளமாக பெற்று வந்துள்ளராம்.தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் வாணி போஜன், 50 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறார்கள். அந்தவகையில், தற்போது 36 வயதாகும் வாணி போஜனின் மொத்த சொத்து மதிப்பு 7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.ஊட்டியில் சொந்தமாக வீடு இருப்பதை போன்று சென்னையிலும் புதிய வீடு ஒன்றினை வாங்கி இருக்கிறார். அதேபோ 2 சொகுசு கார்கள் வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.