இந்தியா
நோய்க்கு மருந்து… விஷப்பாம்புகளை உயிரோடு விழுங்கும் மிருகம்.. எது தெரியுமா?

நோய்க்கு மருந்து… விஷப்பாம்புகளை உயிரோடு விழுங்கும் மிருகம்.. எது தெரியுமா?
ஒட்டகத்திற்கு விருந்தாகும் விஷப்பாம்புகள்
பாம்பு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். எப்பேர்ப்பட்ட வீரமான ஆளாக இருந்தாலும் கூட பாம்பை கண்டாலே அஞ்சி நடுங்குவர். பாம்பு விஷத்தால் நம்மை கொல்கிறது என்பதோடு, அதன் உருவத்தையும், ஊர்ந்து வருவதையும் பார்த்தாலே நம் மனதில் நடுக்க உணர்வு தொற்றி கொள்ளும்.
நாட்டின் பல பகுதிகளில் பாம்பு கடியால் பலர் உயிரிழந்து வருகின்றனர். பாம்பு விஷம் மனிதர்களை மட்டுமல்ல புலி, சிங்கம், யானை போன்ற சக்தி வாய்ந்த விலங்குகளையும் கூட கொல்லும் திறன் படைத்தது. ஆனால் விஷ பாம்புகளை கூட உண்ணும் ஒரு மிருகம் இருப்பது உங்களுக்கு தெரியுமா! அதுவும் பாம்புகள்..உயிரோடு இருக்கும் போதே அவற்றை அதை சாப்பிடும். கேட்பதற்கே மிகவும் விசித்திரமாக இருக்கிறது அல்லவா..
இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. அதே போல பாம்புகளை சாப்பிடும் என்று நாம் இங்கு குறிப்பிடக்கூடிய அந்த மிருகத்திற்கு சாப்பிட விருப்பமில்லையென்றாலும் கட்டாயப்படுத்தி பாம்புகளை உணவளிக்கிறார்கள் என்பதும் இதுவரை நாம் கேட்டிராத தகவலாக உள்ளது. அப்படி எந்த விலங்கு தான் பாம்புகளை தின்ன கூடியது என்ற உங்கள் மனதில் எழும் கேள்விக்கான பதில் ஒட்டகம் ஆகும்.
ஒட்டகங்கள் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வாழ்கின்றன. பாம்புகளை சாப்பிடுவது என்பது அவற்றினுடைய உணவுமுறையின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால் சில சிறப்பு சந்தர்ப்பங்களில், ஒட்டகங்களுக்கு பாம்புகள் உணவாக அளிக்கப்படுகின்றன. ஒட்டகத்திற்கு நோய் தாக்கும் போது பாம்புகள் உணவாக அளிக்கப்படுகின்றன. ஒட்டகங்களை தாக்கும் இந்த நோய் hayam என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்படும் போது, தண்ணீர் அல்லது பிற உணவு எடுத்து கொள்வதை ஒட்டகங்கள் நிறுத்தி விடுகின்றன. சாப்பிடுவதையும் குடிப்பதையும் திடீரென நிறுத்துவதால் ஒட்டகத்தின் உடல் விறைக்கத் தொடங்குகிறது. எனவே தான் இது போன்ற பாதிப்பிலிருந்து ஒட்டகத்தை குணப்படுத்த, விஷப்பாம்புபை உணவாக அளிக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில், ஹயாம் நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு பாம்புகளை உணவாக கொடுப்பதால் அவற்றுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குணமாகும் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒட்டகத்தின் வாயைத் திறந்து பாம்பை கட்டாயப்படுத்தி உணவாக அளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. பாம்பு உள்ளே செல்லும் வகையில் ஒட்டகத்தின் வாயில் தண்ணீரும் ஊற்றப்படுகிறது. பாம்பை உண்பதால் அதன் விஷம் ஒட்டகத்தின் உடல் முழுவதும் பரவும் என நம்பப்படுகிறது.
ஒட்டகத்தின் உடல் முழுவதும் பரவும் விஷத்தின் தாக்கம் நீங்கிவிட்டால், ஒட்டகம் பாதிப்புகளில் இருந்து சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது. ஒட்டகங்கள் பாம்பு விஷத்திற்கு எதிரான நோயெதிர்ப்புத் திறனை கொண்டுள்ளதால், இது மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது அவற்றை சிறந்த நிலையில் வைக்கிறது. பாம்பிலிருந்து ஒட்டகத்தின் உடலில் பரவும் விஷம், குறிப்பிட்ட ஒட்டகத்தின் உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது, இது நோயை எதிர்த்துப் போராட உதவுவதாக ஒட்டகங்கள் பிரதானமாக வாழும் பல பிராந்தியங்களில் நம்பப்படுகிறது.