வணிகம்
UPI Lite: யு.பி.ஐ., லைட் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்? வெளியான முக்கிய அறிவிப்பு..!

UPI Lite: யு.பி.ஐ., லைட் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்? வெளியான முக்கிய அறிவிப்பு..!
யு.பி.ஐ., சேவையில் பணப் பரிமாற்றத்துக்கு இணையதள இணைப்பு மட்டும் இல்லாமல், கூடுதல் உறுதிப்படுத்தல் மற்றும் பரிவர்த்தனை எச்சரிக்கை தகவல் ஆகியவை உடனுக்குடன் வாடிக்கையாளரின் மொபைல் போனில் அனுப்பப்படும். இவை இணையதள இணைப்பு இல்லாத யுபிஐ லைட் சேவையில், இதுவரை பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு 1,000 ரூபாய் வரை அனுமதிக்கப்பட்டது.
இதை 5,000 ரூபாயாக அதிகரித்து, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. சிறிய மதிப்பிலான மின்னணு பரிவர்த்தனைகள் இதனால் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.