Connect with us

இந்தியா

டிடிவி தினகரன் கூட்டத்தில் ஒலித்த ‘கடவுளே அஜித்தே’ கோஷம்… திருப்பூர் விழாவில் சலசலப்பு

Published

on

டிடிவி தினகரன் கூட்டத்தில் ஒலித்த ‘கடவுளே அஜித்தே’ கோஷம்... திருப்பூர் விழாவில் சலசலப்பு

Loading

டிடிவி தினகரன் கூட்டத்தில் ஒலித்த ‘கடவுளே அஜித்தே’ கோஷம்… திருப்பூர் விழாவில் சலசலப்பு

Advertisement

டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாராத்தான் போட்டி நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார்.

இதில் பேசிய டிடிவி தினகரன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை சேர்ந்தவர் தான் என்றும், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான் என்றார்.

விஜயின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருந்த நிலையில், டிடிவி தினகரன் இவ்வாறு கூறினார்.

Advertisement

#JUSTIN கடவுளே அஜித்தே
அமமுக மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு | டிடிவி தினகரன் பரிசு வழங்கும் விழாவில் முழக்கமிட்ட இளைஞர்கள்#TTVDhinakaran #Ajith #AMMK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Sn1K3Eoddp

இதற்கிடையே டிடிவி தினகரன் பேசிக்கொண்டிருந்தபோது, மாணவர்களில் ஒரு தரப்பினர் “கடவுளே… அஜித்தே…” என கோஷம் எழுப்பினர். இதனால் டிடிவி தினகரன் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்த பிறகு பேச்சைத் தொடர்ந்தார். இதனால் கூட்டத்தில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன