சினிமா
திருவண்ணாமலை நிலச்சரிவு; வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்..!
திருவண்ணாமலை நிலச்சரிவு; வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்..!
கூலி படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஜெய்ப்பூர் விமான மூலம் புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்,
சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி காந்த்துக்கு அவரது ரசிகர் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நன்றி தெரிவித்தார்..
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர்கள் கன மழையால்
திருவண்ணாமலையில் நிலசரவில் ஏழு பேர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு நடிகர் ரஜினிகாந்த் ‘ஓ மை காட்’ என்று வருத்தம் தெரிவித்து சென்றார்.