வணிகம்
ரூ.65 சம்பளத்திற்கு வாழ்க்கையை தொடங்கியவர்… இன்று ரூ.23,416 கோடி மதிப்பு நிறுவனத்திற்கு தலைவர்… யார் அவர்?

ரூ.65 சம்பளத்திற்கு வாழ்க்கையை தொடங்கியவர்… இன்று ரூ.23,416 கோடி மதிப்பு நிறுவனத்திற்கு தலைவர்… யார் அவர்?
ஆனால், இது ஒரு வண்டியில் குல்ஃபி விற்கும் நபரால் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கிய சந்திரமோகன், தொடக்கத்தில் ரூ.65 சம்பளத்திற்கு மரக் கிடங்குகளில் வேலை பார்த்தார். பின், 1970-ல் இந்த வேலையை விட்டு விட்டு, வெறும் ரூ.13,000 முதலீட்டில் ஐஸ்கிரீம் வியாபாரத்தை தொடங்கினார். தனது சேமிப்பை முதலீடு செய்து ஐஸ்கிரீம் வியாபாரத்தை தொடங்கினார். இன்று அவரது நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடியாக மாறியுள்ளது. ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகன் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் உரிமையாளரான ஆர்.ஜி.சந்திரமோகன், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கலில் பிறந்தார். கணிதத் தேர்வில் தோல்வியுற்றதை அடுத்து, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மர ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கு ரூ.65 சம்பளம் கிடைத்தது. அங்கு ஒரு வருடம் தொடர்ந்து பணியாற்றியதை அடுத்து, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.
இதனையடுத்து, 1970ல் இந்த வேலையை விட்டு விட்டு, வெறும் ரூ.13,000 முதலீட்டில் ஐஸ்கிரீம் விற்பனை கடையை தொடங்கினார். 250 சதுர அடி கொண்ட அறையில் 3 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி. 15 தள்ளுவண்டிகள் மூலம் தனது ஐஸ்கிரீம்களை விற்று வந்தார்.
இருப்பினும், ஆர்.ஜி.சந்திரமோகனுக்கு வெற்றிப் பாதை அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆரம்ப நாட்களில் அவர் போராட வேண்டியிருந்தது. ஆனால், முதல் வருடத்தில் அவரது வருமானம் ரூ.1.5 லட்சமாக அதிகரித்தது, இது வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது. இதற்குப் பிறகு, 1981-ல், அவர் தனது சிறு வணிகத்தை பெரிய நகரங்களுக்கு கொண்டு செல்ல ‘அருண்’ ஐஸ்கிரீம் பிராண்டை நிறுவினார். 1986இல் அவர் நிறுவனத்தின் பெயரை ஹட்சன் அக்ரோ தயாரிப்பு என்று மாற்றினார்.
காலப்போக்கில், அருண் ஐஸ்கிரீம்கள், ஆரோக்கியா பால், ஹட்சன் தயிர், ஹட்சன் பனீர், ஹட்சன் நெய், ஹட்சன் டெய்ரி ஒயிட்னர் மற்றும் ஐபேகோ போன்ற பிராண்டுகள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் 42 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த தயாரிப்புகள் உள்நாட்டு சந்தையிலும், சர்வதேச அளவிலும் பிடித்தவையாக மாறிவிட்டன. இந்தியாவின் மிகப் பெரிய தனியார் பால் நிறுவனமாகத் திகழும் ஹட்சன், அவர்களின் பால் சேகரிப்புக்காக தினமும் 10,000 கிராமங்களில் இருந்து 4,00,000க்கும் மேற்பட்ட பால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்கிறது. தற்போது, இந்நிறுவனம் ரூ.234.16 பில்லியனாக குறிப்பிடத்தக்க சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.