Connect with us

தொழில்நுட்பம்

ஐபோன் 16 மொபைலுக்கு அமேசான் வழங்கும் அற்புதமான டீல்…!

Published

on

ஐபோன் 16 மொபைலுக்கு அமேசான் வழங்கும் அற்புதமான டீல்...!

Loading

ஐபோன் 16 மொபைலுக்கு அமேசான் வழங்கும் அற்புதமான டீல்…!

Advertisement

ஐபோன் 16 மொபைலின் ஒரிஜினல் விலை ரூ.79,900ஆக இருக்கும் நிலையில், தற்போது இது ரூ.77,900 என்ற சலுகை விலைக்கு கிடைக்கிறது. இந்த குறைந்த விலையில் ஐபோன் 16-ஐ வாங்க கூடுதல் வங்கி தள்ளுபடிகள் அல்லது கூப்பன் குறியீடுகள் தேவையில்லை.

ஆனால், சலுகை இதோடு முடியவில்லை, இன்னும் இருக்கிறது! நீங்கள் எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ பேங்க் கார்டை பயன்படுத்தி ஐபோன் 16-ஐ வாங்கினீர்கள் என்றால் கூடுதலாக ரூ.5,000 கேஷ்பேக் பெறலாம். இதன் மூலம் விலை மேலும் குறையும்.மேலும், அமேசான் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வழங்குகிறது. இது உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது அதிகபட்சம் ரூ.20,000 வரை விலையை இன்னும் குறைக்கும். ஆனால் நீங்கள் கையில் எந்த மாடல் மொபைல் வைத்திருக்கிறீர்கள் மற்றும் அதன் கண்டிஷனை பொறுத்து நீங்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் சேமிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஐபோன் 16 மொபைலை வாங்குவதை ஒருவர் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், அதன் அம்சங்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்…

ஐபோன் 16 மொபைலானது ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் A18 சிப் உடன் வருகிறது. இது சிறந்த வேகம், ஸ்மூத்தான மல்டி டாஸ்கிங் மற்றும் சிறந்த ஆற்றல் திறன் உள்ளிட்டவற்றை யூஸர்களுக்கு வழங்குகிறது. நீங்கள் கேம் விளையாடினாலும் அல்லது தேவைப்படும் ஆப்ஸ்களை பயன்படுத்தினாலும் அதற்கேற்ப நீண்ட பேட்டரி லைஃபை வழங்குகிறது.

Advertisement

நீங்கள் மொபைல் ஃபோட்டோகிராஃபியில் பெரும் ஆர்வம் உள்ளவர் என்றால் ஐபோன் 16-ல் கொடுக்கப்பட்டுள்ள 2x டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 48MP ஃப்யூஷன் கேமரா இருக்கிறது. இது ஜோன் செய்யும்போது கூட தெளிவான காட்சிகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. கூடுதலாக இதில் புதிதாக கேமரா கன்ட்ரோல் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 16-ன் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED ஸ்கிரீன் காரணமாக நீங்கள் பார்க்கும் விஷுவல் அல்லது விளையாடும் கேம்ஸ்கள் என அனைத்தும் ஷார்ப்பாகவும், வைப்ரன்ட்டாகவும் இருக்கும். அதேபோல் இந்த டிவைஸில் கொடுக்கப்பட்டிருக்கும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் மொபைலுக்கு ஸ்டைலை சேர்ப்பது மட்டுமல்லாமல், யூஸர்கள் தங்கள் மொபைலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் மேம்படுத்துகிறது.

Advertisement

இந்த ஐபோன் வாட்டர் ரெசிஸ்டன்ட், டஸ்ட் ப்ரூஃப் மற்றும் கருப்பு, வெள்ளை, பிங்க், டீல் மற்றும் அல்ட்ராமரைன் உள்ளிட்ட 5 அழகான கலர்களில் வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன