இலங்கை
ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட 19 வயது இளைஞன் கைது

ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட 19 வயது இளைஞன் கைது
ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞன் ஒருவன் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் புத்தளம், முந்தல் , பத்துலுஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புத்தளம், முந்தல், பத்துலுஓயா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞன் ஆவார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.