Connect with us

இலங்கை

சபாநாயகர் கலாநிதி அல்லர்: ஜப்பானியப் பல்கலை உறுதி! உடனடியாக பதவி விலகி வேண்டும்

Published

on

Loading

சபாநாயகர் கலாநிதி அல்லர்: ஜப்பானியப் பல்கலை உறுதி! உடனடியாக பதவி விலகி வேண்டும்

சபாநாயகரின் கலாநிதிப் பட்டம் போலியானது என ஜப்பான் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ள நிலையில் அவர் பதவி விலகவேண்டும் எனவும் பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வந்தவர்களால் இன்று பாராளுமன்றத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.

 கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

 நாட்டில் சர்ச்சைக்குரிய அறிக்கைகள்குறித்து தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர் குறித்த தகவல் பொய்யானது என்றும், கலாநிதி அசோக ரன்வல கலாநிதி இல்லை என்றும் அவர் கூறினார்.

 இதேவேளை, சபாநாயகர் அசோக சபுமல் ரன்வெலஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில்கல்வி கற்வில்லை என தகவல்கள்வெளியாகியுள்ளன.
அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள
பல்கலைக்கழகத்தில் முதுகலைப்
பட்டம் படித்தவரா என்பது தொடர்
பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்
பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம்
தகவல்களைக் கோரியுள்ளது.

 இந்நிலையில், சபாநாயகர் அசோக
ரன்வல்ல தனது கலாநிதி பட்டம்
குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்
பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை
ஒன்றினை வெளியிடுவார் என அமைச்
சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த
ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

Advertisement

 இவற்றிற்கு மத்தியில் ஜப்பானிய
பல்கலைக்கழகம் வழங்கிய இந்த தகவல்
புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், அசோக சபுமல்
ரன்வால என்னும் நபர் தமது பல்கலைக்
கழகத்தில் கல்வி கற்கவில்லை என
அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம்
அறிவித்துள்ளது.
சபாநாயகரின் கலாநிதி பட்டம்
தொடர்பில் பல்வேறு தரப்பினரால்
வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்
பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன