Connect with us

சினிமா

தனுஷை பிடித்து ஆட்டும் ஏழரை சனி.. கைவிடப்பட்டதா இளையராஜா பயோபிக்.?

Published

on

Loading

தனுஷை பிடித்து ஆட்டும் ஏழரை சனி.. கைவிடப்பட்டதா இளையராஜா பயோபிக்.?

சமீபத்தில் தான் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் அதற்குள் இளையராஜாவின் பயோபிக் படம் கைவிடப்பட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் தான் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஆன பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனால் நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மற்றொருபுறம் ஐஸ்வர்யாவுடன் தனுசுக்கு விவாகரத்து கிடைத்தது.

Advertisement

இப்படி அடி மேல் அடி தனுஷுக்கு விழுந்து வரும் நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கமலின் கதையில் இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னும் இதற்கான படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது.

எப்படியும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. ஏனென்றால் இப்போது இயக்கம் மற்றும் நடிப்பு என மற்ற படங்களில் தனுஷ் படு பிஸியாக இருந்து வருகிறார்.

ஆனால் இந்த சூழலில் இளையராஜாவின் பயோபிக் இப்போது தொடங்க வாய்ப்பில்லை என்பது போல செய்தி வெளியாகியிருக்கிறது. இப்படத்தை மெர்குரி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

Advertisement

ஆனால் அந்த நிறுவனம் சில பண நெருக்கடியில் இருப்பதால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் எப்படியும் இளையராஜாவின் பயோபிக் படத்தை எடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை தனது சொந்த தயாரிப்பில் மூலமாக கூட இந்த படத்தை தனுஷ் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன