சினிமா
நேற்று வைரல்! இன்று வைத்தியசாலையில்… நடிகருக்கு நடந்தது என்ன?

நேற்று வைரல்! இன்று வைத்தியசாலையில்… நடிகருக்கு நடந்தது என்ன?
நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நேற்று செய்தியாளர்களை விரட்டி விரட்டி அடித்த இவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் இதோதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில், நேற்று அவரது மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் நுழைய முயன்றபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் பாபுவின் பவுன்சர்கள், தனிப்படை போலீசார் ஆகியோர் ஊடகவியலாளர்களை விரட்டியடித்தனர்.மேலும் நடிகர் மோகன் பாபு சில செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி தாக்கிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் காயமடைந்த 2 ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊடகவியலாளர்களை தாக்கியது தொடர்பாக மோகன் பாபு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது நடிகர் மோகன் பாபுவுக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார் . நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்தநிலையிலே இவ்வாறான சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.