இலங்கை
பெரியகல்லாறில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

பெரியகல்லாறில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து
மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பெரியகல்லாறு பாலத்திற்கு அருகில் எதிரெதிரே பயணித்துக் கொண்டிருந்த மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
எனினும் குறித்த விபத்தில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.