இந்தியா
SM Krishna | கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

SM Krishna | கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
கடந்த 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இதையடுத்து, 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா ஆளுநராகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், 2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை மத்திய வெளியுரவுத்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா.
கடந்த 1989 முதல் 1993 வரை கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், 1971ஆம் ஆண்டு முதல் 2014 வரை பல முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஆனால் இவரை கட்சியிலிருந்து ஒதுக்குவதாகவும், காங்கிரஸ் கட்சி குழப்பமாக சூழலில் இருப்பதாகவும் கூறி, கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.