இந்தியா
Weather Update: அடுத்த வார தொடக்கமே மிக முக்கியம்.. தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்.. இந்திய வானிலை மையம் தகவல்!

Weather Update: அடுத்த வார தொடக்கமே மிக முக்கியம்.. தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்.. இந்திய வானிலை மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் நிலவி வந்தது. ஒரே இடத்தில் நின்று அதிகப்படியான ஈரப்பதக் காற்றுக் குவிதலை டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் மீது விழச்செய்ததால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதீத கனமழை பதிவானது.
இந்நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17ஆம் தேதி கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்றும், வருகிற 16,18 ஆகிய தேதிகளிலும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள தகவலில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டி நிலவி வந்த ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய கொமோரின் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16 ஆம் தேதி வட இலங்கை – தமிழகத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த இரண்டு வாரத்திற்கு புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.