இந்தியா
ஒரு லிட்டர் ரசாயனம் கலந்த 500 லிட்டர் பால்.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!

ஒரு லிட்டர் ரசாயனம் கலந்த 500 லிட்டர் பால்.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!
ஒரு லிட்டர் ரசாயனம் கலந்து 500 லிட்டர் பாலை தயாரித்த பால் விற்பனையாளரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவானது தற்போது சமீபத்தில் வைரலாகி வருகிறது. அஜய் அகர்வால் என்ற வியாபாரி உள்நாட்டில் அகர்வால் டிரேடர்ஸ் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்வதை போலீசார் கண்டுபிடித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர், இந்த செயற்கை பாலின் சுவையை உண்மையானதாக மாற்ற செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது அகர்வாலின் கடை மற்றும் நான்கு பால் சேமிப்பு நிலையங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் 4 குடோன்களில் இருந்து ஏராளமான ரசாயனங்களை பறிமுதல் செய்தனர்.
பாலை தயாரிப்பதற்கு என்னென்ன இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அகர்வால் சரியாக வெளியிடவில்லை, ஆனால் வெறும் 5 மில்லி லிட்டர்களைக் கொண்டு இரண்டு லிட்டர் வரை செயற்கை பால் தயாரிக்க முடியும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது இது 1 லிட்டர் ரசாயனத்தைப் பயன்படுத்தி 500 லிட்டர் செயற்கை பாலை தயாரிப்பதற்குச் சமமாகும். இது உண்மையான பாலின் சுவை மற்றும் மணம் கொண்டது மற்றும் போலி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. பாலின் அகர்வால் போலி பால் தயாரிக்க சிறப்பு சுவையூட்டும் முகவர்களைப் பயன்படுத்தினார்.
एक होता है मिलावटी, दूसरा होता है नकली। 100% नकली दूध बनाने का डेमो देखिए। कई केमिकल मिलाकर एक सफेद घोल तैयार हुआ। उसे नेचुरल पानी में डाला और दूध बनकर तैयार। इस 1 लीटर केमिकल से 500 लीटर दूध बनता है। फार्मूला बनाने वाला अजय अग्रवाल गिरफ्तार है।
📍बुलंदशहर, उत्तर प्रदेश pic.twitter.com/00tkeujkGM
இந்த செயற்கை பால் தயாரிக்கும் பார்முலாவை மற்ற பால் விற்பனையாளர்களுக்கும் அகர்வால் கற்றுக் கொடுத்துள்ளார். இந்த பார்முலாவை அவர் எங்கு தெரிந்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கைகளின் படி, சோதனையின் போது செயற்கை பாலில் பயன்படுத்தப்படும் சில செயற்கை இனிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டதாக அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸ்டிக் பொட்டாஷ், வே பவுடர், சர்பிடால், மில்க் பெர்மீட் பவுடர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா ஃபாட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பால் தயாரிக்கப்படுகிறது. அகர்வாலின் ஃபார்முலாவின் ஆதாரத்தைக் கண்டறிய போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து FSSAI-இன் அதிகாரியான வினித் சக்சேனா கூறியதாவது, கடந்த 6 மாதங்களில் அவர் இந்த பால் மற்றும் பால் பொருட்களை எங்கெங்கெல்லாம் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களிடம் பால் வாங்கியவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.