Connect with us

சினிமா

12 வருட தவத்தினால் பிறந்த குழந்தை.. ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்

Published

on

Loading

12 வருட தவத்தினால் பிறந்த குழந்தை.. ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்

கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்தவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்காத ராதிகா, ஹிந்தி சினிமாவில் பிஸியாக காணப்பட்டார்.2011 ஆம் ஆண்டு பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் பல ஆண்டுகள் குழந்தை பெற்றுக் கொள்ளாமலே இருவரும் வாழ்ந்து வந்தார்கள்.d_i_aஇந்த நிலையில், தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக அதிகார்வ பூர்வமாகவே புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் ராதிகா. குறித்த புகைப்படத்தில் குழந்தைக்கு பால் ஊட்டும் விதத்தில் அமர்ந்து உள்ளதோடு, மடிக் கணணியையும் அருகில் வைத்துள்ளார். மேலும் தனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.தற்போது திருமணம் ஆகி சுமார் 12 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றெடுத்த  ராதிகா ஆப்தே – பெனெடிக்ட் டெயிலர் ஜோடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன