Connect with us

பொழுதுபோக்கு

ஓங்கி அறைந்த பத்மினி: வலியால் அலறிய சிவாஜி: பரவாயில்லைனு சொன்னதுக்கு இதுதான் பரிசா?

Published

on

sivaji Padmini

Loading

ஓங்கி அறைந்த பத்மினி: வலியால் அலறிய சிவாஜி: பரவாயில்லைனு சொன்னதுக்கு இதுதான் பரிசா?

திரையுலகில் பல படங்களில் இணைந்து நடித்துள்ள சிவாஜி பத்மினி ஜோடி இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு காட்சிக்காக சிவாஜியை கன்னத்தில் பத்மினி அறைந்துள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது என்ன என்பது தெரியுமா?தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் தான் சிவாஜி கணேசன். முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி, நாட்டிய பேரொலி என்று அழைக்கப்படும் பத்மினியுடன் இணைந்து 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பணம். இந்த படம் சிவாஜி நடித்த 2-வது படம் என்றாலும் பத்மினி அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார்.அதன்பிறகு பத்மினி – சிவாஜி இருவரும் இணைந்து நடித்த படம் தான் எதிர்பாராதது. 1954-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பத்மினி சிவாஜி இருவரும் காதலித்து வரும் நிலையில் வெளிநாட்டிற்கு படிக்க போகும் சிவாஜி, எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதனிடையே சிவாஜியின் அப்பாவை பத்மினி திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, திருமணமும் முடிந்துவிடுகிறது.விமான விபத்தில் சிக்கிய சிவாஜி கண்பார்வையை இழந்து பத்மினியின் வீட்டில் தஞ்சமடைகிறார். தனது அப்பாவின் மனைவி என்று தெரியாத சிவாஜி பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால் அவளுடைய நண்பனாக அந்த வீட்டில் இருக்கிறார். அப்போது ஒருநாள் பத்மினி கையை பிடித்து சிவாஜி பழைய நினைப்பில் நடந்துகொள்ள பத்மினி அவரை ஓங்கி அடித்துவிடுவார்.இந்த காட்சி படமாக்கப்படும்போது சிவாஜியை அடிக்க பத்மினி தயங்கியபோது பரவாயில்லை நடிப்புதானே தைரியமாக பண்ணுங்க என்று சிவாஜி கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பத்மினி படப்பிடிப்பு தொடங்கியவுடன் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். ஒரு அறையோடு விட்டுவிடாமல் மாறி மாறி இறந்தபோதும், காட்சி சிறப்பாக வருவதை பார்த்த இயக்குனரும் கட் சொல்ல மறந்துவிட்டதால், பத்மினியும் அதிரடியாக சிவாஜியை பார்த்து அறைந்துள்ளார்.ஒரு கட்டத்தில் சிவாஜியின் முகத்தில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில்,  வலி தாங்கிக்கொள்ள முடியாத சிவாஜி கட் கட் என்று கத்திய நிலையில், படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பத்மினிக்கு ஊசி போட்டு கைகால் அமுக்கிவிட்டுள்ளனர். சிவாஜியை யாரும் கண்கொள்ளவில்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன