இலங்கை
ஜனாதிபதியின் வெற்றிடத்தை நிரப்ப புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதியின் வெற்றிடத்தை நிரப்ப புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் கொள்வனவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சு ஆகியவை இயங்கிவந்தன.
இந்நிலையில் அவ் அமைச்சுகளுக்கு முறையே எரங்க வீரரத்ன, அருண ஜயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அருண் ஹேமச்சந்திர, ஹிந்த ஜயசிங்க, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.