இலங்கை
தமிழர் பகுதியில் கிறிஸ்துவ ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

தமிழர் பகுதியில் கிறிஸ்துவ ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!
திருகோணமலையில் உள்ள மூதூர், சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் இன்றையதினம் (15-11-2024) மூதூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அன்ரன் பிரஜித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.
குறித்த இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார்? கொலையா, தற்கொலையா? என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.