Connect with us

இந்தியா

இந்தியாவில் இலங்கை அதிபர்… தமிழக மீனவர்களுக்காக ராகுல் கடிதம்!

Published

on

Loading

இந்தியாவில் இலங்கை அதிபர்… தமிழக மீனவர்களுக்காக ராகுல் கடிதம்!

இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க கோர வேண்டும் என மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.

Advertisement

இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அவருக்கு இன்று இந்திய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார்.

இதற்கிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல்காந்தி, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க என இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”இந்தக் கடிதம் உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். தற்போது இலங்கை சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களின் அவல நிலை குறித்தும், இலங்கை அதிகாரிகளால் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதால் வாழ்வாதாரம் இழக்கப்படுவது குறித்தும் உங்களுக்கு எழுதுகிறேன்.

Advertisement

எங்கள் மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி கப்பல்களை விடுவிக்க இந்திய அரசின் தலையீட்டைக் கோரிய செப்டம்பர் 28, 2024 தேதியிட்ட எனது கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இலங்கை ஜனாதிபதிக்கு விருந்தளிக்க நாம் தயாராகும் நிலையில், அநுர திஸாநாயக்க இந்தியாவிற்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ள இந்த வேளையில்,

சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் (IMBL) தற்செயலாகத் தாண்டிய இந்திய மீனவர்களை இலங்க கடற்படை கைது செய்திருக்கும் நிலையில், அவர்களை முன்கூட்டியே விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

மேலும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்யவும், சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி கப்பல்களை விடுவிக்கவும் இந்திய அரசு கோர வேண்டும்.

நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க, கூட்டுப் பணிக்குழு போன்ற அரசுகளுக்கிடையேயான வழிமுறைகள் தொடர்ந்து சந்திப்பதை உறுதிசெய்யுமாறு இந்திய அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன