பொழுதுபோக்கு
கருவறையில் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்தது என்ன?

கருவறையில் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார் மற்றும் அவரது வளர்ப்பு மகளான ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்களின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது. இக்கோயில் மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது.இந்நிலையில் இன்று (டிச.16) இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்ய அங்கு சென்றுள்ளார். கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள், பக்தர்கள் முறையிட்டு உள்ளனர். இதன் பின் கருவறையில் இருந்து வெளியே வந்த இளையராஜா அர்த்த மண்டபத்தின் படி அருகே நின்றவாறு கோவில் மரியாதையை ஏற்று சாமி தரிசனம் செய்து சென்றார். முன்னதாக, அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.