இலங்கை
காலி சிறைச்சாலையில் 540 தொலைபேசிகள் மீட்பு!

காலி சிறைச்சாலையில் 540 தொலைபேசிகள் மீட்பு!
காலி சிறைச்சாலையில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 540 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்கல்வி அமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குறித்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் அமைவிடம் கையடக்க தொலைபேசிகளின் கடத்தலுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறைச்சாலையில் பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.