இந்தியா
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி!
முழுமையான முயற்சிகள் இருந்தால், முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலகட்டம்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப பொறுப்புகள் அதிகரிக்கலாம். அது உங்கள் நன்மைக்கே. யாரிடம் பேசும்போதும் துணிவை விட பணிவே நல்லது.
புறம்பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பணிகளில் நேரடி கவனம் முக்கியம். எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமானாலும் புலம்பாமல் பொறுமை காப்பதே நல்லது.
இல்லத்தில் ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.
வரவு அதிகரிக்கும். மூன்றாம் நபர் தலையீட்டை அறவே தவிருங்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள் பேசவேண்டாம்.
தரல் பெறலில் அலட்சியம் கூடாது.
சுபகாரியத்தில் நிதானம் முக்கியம்.
செய்யும் தொழிலில் சீரான லாபம் கிட்டும். அது தொடர, நேரான செயல்கள் முக்கியம்.
அரசுத்துறையினர் ஆதரவு அதிகரிக்கப் பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் வரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு உண்டு.
சட்டப்புறம்பு சகவாசத்தை சட்டென உதறுங்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும்.
மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வந்து சேரும்.
இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள்.
அடிவயிறு, முதுகு, பற்களில் உபாதை வரலாம்.
மகாலக்ஷ்மியைக் கும்பிடுங்கள். மகிழ்ச்சி மலரும்.
அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் விஜயபாஸ்கர்
வேதாந்தா, பாரதி ஏர்டெல், ராம்கோ, முத்தூட் : தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!