இந்தியா
கடவுளே அஜித்தே.. – “நானும் அஜித் fan தான்..” – டி.டி.வி. சுவாரஸ்ய பதில்

கடவுளே அஜித்தே.. – “நானும் அஜித் fan தான்..” – டி.டி.வி. சுவாரஸ்ய பதில்
மதுரை மாநகர் மற்றும் புறநகர் அமமுக நிர்வாகிகளைச் சந்தித்து, கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2026 தேர்தல் தொடர்பான ஆலோசனையை அக்கட்சிப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், “தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணிக்கு திமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலாம்” என்று தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், அதிமுகவை ஏற்கத் தயார் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டி.டி.வி. தினகரன், “திருப்பூரில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று வென்றவர்களுக்கு பரிசளிக்கச் சென்றேன். அப்போது பேசும்போது, கீழே இருந்தவர்கள் ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷம் எழுப்பினர். எனக்கு அது சரியாகக் கேட்காமல் என்ன கோஷம் என அருகில் இருந்தவரிடம் கேட்டபோது, அது தற்போது டிரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
பிறகு அமைதி காக்கச் சொன்னோம். அவர்களும் அமைதியாகிவிட்டார்கள். ஒவ்வொரு தொலைக்காட்சியும் அதனை ஒவ்வொரு விதமாகப் போட்டார்கள். ஒரு தொலைக்காட்சி, டி.டி.வி. அதிர்ச்சி என்று போட்டனர். இதில் அதிர்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது. நானும் அஜித் ஃபேன் தான். நான் பல குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது அஜித் குமார் என்று பெயர் வைத்துள்ளேன்.
#JUSTIN “நானும் அஜித் Fan தான்”
திருப்பூரில் அமமுக நிகழ்ச்சியில் சிலர்
‘கடவுளே.. அஜித்தே..’ என முழக்கமிட்டது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சுவாரஸ்ய பதில்#TTVDhinakaran #Ajith #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/XHrhXUZq2I
இதனை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எனது பதிலைச் சொல்லிவிட்டேன். அதனை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்களோ அப்படி ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.