வணிகம்
பல பேங்க் அக்கவுன்ட்ஸ்களை வைத்திருப்போருக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்குமா? உண்மை என்ன…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

பல பேங்க் அக்கவுன்ட்ஸ்களை வைத்திருப்போருக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்குமா? உண்மை என்ன…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
இருப்பினும், இது உண்மையா? இந்தியாவில் இனி ஒரு நபர் பல பேங்க் அக்கவுன்ட்களை வைத்திருப்பது சட்டவிரோதமா? அல்லது, இனி ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாதா? அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் பல அக்கவுன்ட்கள் அல்லது ஒரே வங்கியில் பல அக்கவுன்ட் உள்ளவர்களுக்கு இப்போது அபராதம் விதிக்கப்படுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆனால், இது போன்று வெளியான மற்றும் ஷேர் செய்யப்பட்ட செய்திகள் போலியானவையே. எனவே பல பேங்க் அக்கவுன்ட்களை வைத்திருப்பவர் நீங்கள் என்றால் பீதி அடையத் தேவையில்லை, மேலும் ஒரே வங்கியில் பல அக்கவுன்ட்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் பேங்க் அக்கவுன்ட்கள் வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி எந்த அபராதமும் விதிக்கப் போவதில்லை.
மல்டிபிள் பேங்க் அக்கவுன்ட்களை வைத்திருப்போருக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்க உள்ளதாக சோஷியல் மீடியாவில் வெளியான தகவல்கள் குறித்த உண்மையை சரிபார்த்த பிறகு பிரஸ் இன்ஃபர்மேஷன்பீரோ (PIB) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் அந்த தகவலுக்கு தனது போலி செய்தி எச்சரிக்கையை (Fake News Alert) வெளியிட்டது. PIB அதன் அதிகாரப்பூர்வ X பிளாட்ஃபார்மில் ஒரு போஸ்ட்டை பகிர்ந்து கொண்டது. அதில் ‘இந்த செய்தி போலியானது மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் மற்றும் ஒரே வங்கியில் பல அக்கவுன்ட்களை வைத்திருக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான எந்த வழிகாட்டுதலையும் RBI வெளியிடவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.
⚠️ Fake News Alert
कुछ आर्टिकल में यह भ्रम फैलाया जा रहा है कि भारतीय रिजर्व बैंक की नई गाइडलाइंस के अनुसार, अब एक से अधिक बैंक में खाता रखने पर जुर्माना लगाया जाएगा।#PIBFactCheck
▶️ @RBI ने ऐसी कोई गाइडलाइन जारी नहीं की है।
▶️ ऐसे फर्जी खबरों से सावधान रहें! pic.twitter.com/2xUVZoe3lI
இதன் மூலம் பல பேங்க் அக்கவுன்ட்களை வைத்திருக்கும் தனி நபர்களுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் வைரலான செய்திகள் போலியானவை என்பது தெளிவாகிறது. எனவே போலி செய்திகளை நம்பி நீங்கள் பீதி அடையவோ, அவசரப்பட்டு உங்கள் அக்கவுன்ட்களை க்ளோஸ் செய்யவோ தேவையில்லை.
பல தேவைகளுக்காக ஒரு தனி நபர் பல பேங்க் அக்கவுன்ட்களை வைத்திருக்க விரும்புகிறார்கள் அல்லது இதற்கான சூழல் ஏற்படுகிறது. ஒரு நபர் அல்லது அவரது குடும்பத்தினர் இந்தியாவில் வைத்திருக்கக்கூடிய வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் இதுவரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்திய குடிமக்கள் பல வங்கிக் கணக்குகளை வைத்திருக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.
மக்கள் தங்கள் பேங்க் அக்கவுன்ட்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 2 அல்லது 3 வரை வைத்திருந்தால் போதும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் எந்த நோக்கமும் இல்லாமல் அதிக பேங்க் அக்கவுன்ட்களை வைத்திருப்பதும், அவற்றை பராமரிப்பதும் கடினம். மேலும், நீங்கள் வைத்திருக்கும் அனைத்து அக்கவுன்ட்களிலும் குறைந்தபட்ச பேங்க் பேலன்ஸை வைத்திருக்க வேண்டும், தவறினால் குறிப்பிட்ட வங்கிகள் நான்-மெயின்டனன்ஸ் கட்டணத்தை விதிக்கக்கூடும்.