
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 18/12/2024 | Edited on 18/12/2024

‘லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ தயாரிப்பில். உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், “உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். ‘Ui’ படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து உபேந்திரா பேசுகையில், “டிரெய்லரில் நிறைய வித்தியாசமான விஷயங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் படம் ஒரு ஃப்ரூட் சாலட் போல! இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும். கமர்ஷியல் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது. இன்னொரு சர்ப்ரைஸான விஷயமும் இதில் நீங்கள் பார்த்து என்னிடம் சொல்ல வேண்டும் என காத்திருக்கிறேன்” என்றார்.