இந்தியா
சென்னையில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல்.. – “துறையாடல்” புத்தகம் வெளியீடு!

சென்னையில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல்.. – “துறையாடல்” புத்தகம் வெளியீடு!
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், சிந்துவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். சுனாமியின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கடைவெளி பதிப்பகத்தால் ‘துறையாடல்’ என்ற தலைப்பில் வெளிவரும் இந்த நூல் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில், தமிழக கடற்கரை ஓரங்களில் இந்த நூலின் ஆசிரியர் டாக்டர். வரேத்தியா கொஸ்டண்டின் மேற்கொண்ட பயணங்களையும், கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான நிபுணர்கள் மற்றும் கவனிப்பாளர்களுடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களையும் அடிப்படையாக கொண்டு 976 பக்கங்களில் இந்த புத்தகம் தயாராகி உள்ளது.
விழாவில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், ஆய்வாளர் கீதா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
முன்னதாக, “துறையாடல்” புத்தகத்தை லதா, புஷ்பநாயகம் என்பவர்கள் வெளியிட, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் சௌந்தரராஜன், இந்து தமிழ் திசை துணை ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.