Connect with us

இலங்கை

நாடாளுமன்றில் வெடித்த அர்ச்சுனா எம்.பி; சபை முதல்வர் எச்சரிக்கை!

Published

on

Loading

நாடாளுமன்றில் வெடித்த அர்ச்சுனா எம்.பி; சபை முதல்வர் எச்சரிக்கை!

  நாடாளுமன்றில் இன்றையதினம் உரையாற்றிய யாழ்மாவடா சுயேட்சை எம் பி இராம்மநாதன் அருச்சுனா, சபையில் காட்டமாக கத்துக்களை முன்வைத்ததால் சபாநாயகரால் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பொறுப்புகளில் இருந்து அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இன்று (18) கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அர்ச்சுனா எம்.பி,

Advertisement

யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் எந்தவித ஒப்பந்தங்களும் இன்றி 170 இளைஞர் யுவதிகள் சேவையாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாதம் 10000 ரூபாய் சம்பளம் ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் குறித்த தொகை 5 மாதங்களே வழங்கப்பட்டிருந்தது. இது ஒரு மிலேச்சத்தனமான குற்றம் என்றும் அருச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாட்களுக்கு சுகாதார அமைச்சர் வாய்மொழி மூலம் வாக்குறுதிகளை வழங்கி இருந்துள்ளார்.

Advertisement

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாட்கள் வைத்தியசாலை சென்ற போது வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியால் மிலேச்சத்தனமாக மிரட்டப்பட்டதுடன் காவலாளிகளால் வெளியேற்றப்பட்டதாகவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய, தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வைத்தியசாலைக்கு சென்ற போது வைத்தியர் சத்தியமூர்த்தி தன்னை தரம் குறைவாக நடத்தி அவரின் அறிவுறுத்தலின் படி காவலாளி மற்றும் பொலிஸார் மூலமாக வெளியேற்றினார் என அர்ச்சுனா கூறியுள்ளார்.

Advertisement

அது தொடர்பில் தனக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டுள்ளதாகவும், இதுவரை தனக்கெதிராக 19 வழக்குகள் உள்ளதாகவும் தமிழர்களுக்காக நெஞ்சில் சூடு வாங்கவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரை கடுமையாக தாக்கியும் நடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பேசியிருந்தார்.

இததனையடுத்து சபாநாயகரால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன